ARTICLE

முதல் மஸ்ஜpத் எழுந்த ‘பர்பரீன்’ மண்ணின் மைந்தன் கட்டிய புது பள்ளிவாசல்

பர்பரீன்

எமது அரபு மூதாதையர்கள் முதல் எமது மண்ணில் வந்து கால் பதித்த தலம் இது.

பர்-பர் என்பது நிற்க!… நிற்க!… என்று அரபியில் பொருள் படும்.

 

அரபிகள் வந்திறங்கிய முதல் இடம்

கடல் மூலம் வந்து இத்தலத்தில் இறங்கிய அரபிகள் இங்கே ‘நிற்கத் தான்’ செய்தனர். போகவில்லை. இங்கு வாழ்ந்த சிங்கள மக்களுடன் இறுக இணைந்தார்கள். தம் வம்ச விருத்திக்கும் வழிசெய்து கொண்டார் கள். இங்கே தங்கி நின்ற அரபு மூதாதையர்களின் இந்த கடலோரக் கிராமத்தில் மட்டும் அவர்கள் தங்கவில்லை. நாடு பூராவும் விரிந்து சென்றார்கள்.

நாணயமான வியாபாரம், நற்பண்பு, நல்லன்பு ஆதியாம் ஆபர ணங்கள் அணிகலன்களைக் கொண்டு ‘செரன்தீப்’ பூராவும் தமக்கென்றே சிறுசிறு ‘கோட்டைகளை’க் கட்டிக் கொண்டார்கள். சுற்றுச் சூழலில் வாழ்ந்த சிங்கள தமிழ் மக்களோடு அன்பு பூண்டு வாழ்ந்தார்கள். அறமே அவர்கள் அரணாகின.

 

பொட்டணி வியாபாரிகள்

நாணயம் தவறாது, சென்ற இடமெல் லாம் வியாபாரத் தளங்களை ஏற்படுத் திக் கொண்டார்கள். உடுதுணி வகை கள், வாசனைத் திரவியங்கள், வளை யல்கள், தோடுகள் போன்றவற்றை பொட்டணி கட்டி தலையில் சுமந்து கொண்டு ஊர்ஊராகத் திரிந்து சகோதர சிங்கள மக்கள் மத்தியில் வியாபாரம் செய்தார்கள். இவர்கள் இன்றும் ‘பொட்டணிக்காரர்கள்’ என்று அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி உரையாற்றுகிறார்.

உள்நாட்டு வெளிநாட்டுத் துணிமணி கள் இறக்குமதி இல்லாத காலத்தில் இம்மக்களுக்குத் துணிவழங்கி (விற்று) பெருமை சேர்த்துக் கொண்டார்கள். அரபி வழிவந்த இந்த முஸ்லிம்கள்.

தலையில் பொட்டாயினைச் சுமந்தவர் இதயத்தில் குர்ஆனைச் சுமந்தார்.

களுத்துறையைச் சேர்ந்தவர், சுஹைல் ஆலிம் ஸாஹிப். இப்படியான ஒரு பொட்டானி வியாபாரி. ‘நான் ஏன் சும்மா திரியோனும்?….’ என்ற கேள்வி அவர் மனதில் எழ பிறகு ஓதிக்கொண்டே போனார். என்னே ஆச்சரியம், ஒரு ஹாபிழானார். முதன் முதலில் மஹரகம அல் அஸ்ஹரிய்யாப் பள்ளிவாசலில் ‘தராவீஹ்’ தொழுகையை நடத்தினார். இந்த பொட்டணி தூக்கிய ஹாபிழ்!….

இலண்டனிலிருந்து வந்துள்ள எமது மைத்துனர் டாக்டர் எம். ஹாரிஸ் இஸட். டீன். மஹரகம புகழ் ‘தீன்’ பாஸ் மாமாவின் புதல்வர்.

இந்த பர்-பரீன் கடலோரக் கிராமத்தில் வல்லோனை வணங்க நிறுவப்பட்ட முதல் ஆலயம்தான் ‘அப்ரார்’ பள்ளிவாசல். இது பேருவளை மருதானைப் பகுதியில் அமைந்திருக்கின்றது. பர்-பரீன் என்ற சொல்லில் இருந்து மருவியதுதான் ‘அப்ரார்’ என்பது.

இலங்கையில் அராபியர்களால் முதலாவது கட்டப்பட்ட பர்பரீன் பள்ளிவாசல் அமைந்துள்ள நிலத்தொடர்ச்சியில் கிழக்குப்புற வாசல் சீனன்கோட்டை (Deena Goda) ஆகும். சென்றவாரக் கட்டுரையில் நாம் குறிப்பிட்ட சுவையான கதைக்குரிய நாயகன்தான் எம். எஸ். எம். பZல் ஹாஜியார். இவர் ஒரு மாணிக்க வியாபாரி, அரசியல்வாதி – இவர் மாணிக்கக் கற்களையும் விற்றார்.

ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் மெளலவி றிஸ்வி முப்தி உரையாற்றுகிறார்..

அரசியலையும் செய்தார். விடுமுறைகால குளுமையையும், சுகத்தையும் அள்ளித்தரும் நூரலைக்கு அடிக்கடி சென்று வருவார். அங்கே லேடி மக்கலம் டிறைவ் ஆரம்பமாகும் முனையில் ஒரு ஜும்மாப் பள்ளிவாசல், எதிரே ஆங்கிலேயர்களின் வணிகத்தளமான கார்கிள்ஸ் (Cargills), வியாபாரக் கட்டடம் அப்பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் பழமையைக் கண்டார். ஒரு நூற்றாண்டுக்கு மேலாய் தொழுகையாளிகளை அக்கட்டடம் அணைத்து நின்றது…

பழையன கழிவதும் புதியன புகு தலும்… வழுவல கால வகைனானே.

 

தந்தையின் சொல்லை மீறாத தனயன்

குளிர் காற்றோடு கலந்த சில்லென ஒரு எண்ணம் அவர் உள்ளத்தில் துளிர்ந்தது. அல்லாஹ்வுக்காக ஒரு புதிய பள்ளிவாசல் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுக்கும் அழகிய சீமைக்கு அழகுசேர்க்கும் ஒரு புதுப் பள்ளிவாசலை நிறுவுவதற்கு வள்ளல் பZல் ஹாஜியார் நிய்யத்து வைத்தார். அதனை நிறைவேற்றி வைக்கும் பணியைச் செய்து முடிக்க முன்பு அவர் அல்லாஹ் அளவில் சென்றுவிட்டார். வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ரஹ்மத் செய்வானாக!

விட்டார்களா, தம் அருமை மக்கள்?…. தந்தை முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டார்கள் என்பதை அவர் அன்புப் புதல்வர் முன்னாள் மேயரும் பேருவளை நகர சபை தகைசார் தலைவருமான மர்ஜான் பZல் நன்குணர்ந்திருந்தார். தம் குடும்பஸ்தவர்களைவும் அணைத்துக்கொண்டு பணியை முன்னெடுத்தார்.

புதிய பள்ளிவாசல் உருவாக உதவிய கரத்தால் (மர்ஜான் பZலின்) அன்பளிப்புச் சின்னமொன்று ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றது. அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி பேருவளை நகர சபைத் தலைவர் அல்-ஹாஜ் மில்பர் கபூர், அல்-ஹாஜ் அஹ்கம் உவைஸ், அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க, ஸ்ரீரங்கா எம்.பி ஆகியோர் அருகில்.

அல்-கபீர் பள்ளிவாசல் கம்பீரமாக எழுந்தது

நாட்டுத் தலைவர் திறந்துவைத்த முதல் பள்ளிவாசல் என இது உலகில் இன்று அறியப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பள்ளியின் உள்ளும் வெளியிலும் திரண்டிருக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமக்கே உரித்தான பாணியில் வரலாற்றோடு கலக்கும் வண்ணம் குர்-ஆன் ஹதீஸ் ஆகியவைகளிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி சிறப்பானதோர் உரை நிகழ்த்தினார். அவ்வுரையின் முழுமையினை அறிந்து தெளிய இன்னுமொரு வாய்ப்பினை இங்கே ஏற்படுத்திக் கொள்வோம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அல்ஹாஜ் எம். றிஸ்வி முப்தி ஆற்றிய உரை ,யிரம் பொன் பெறும். ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்தவண்ணம் வழமைக்கு மாறாக ஜனாதிபதி அவர்கள் தம் தலையை அசைத்தவாறு ஒவ்வொரு சொல்லுக்கும் சம்மதம் தெரிவிப்பதுபோல் அமர்ந்திருந்தார்கள்.

 

ஜம்மியத்துல் உலமா தலைவரின் அர்த்தபுஷ்டியுள்ள உரை

ஜெனீவா நகர்சென்று அங்கே தாய்நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்க இடம்கொடாதவாறு அரபு நாடுகள் தம் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென சன்மார்க்கச் சொற்பொழிவாளர் ஷேக் அகார் முஹம்மத்தோடு அரபுநாடு பிரதிநிதிகளுக்கு அவர்கள் பேசும் அரபு மொழியிலேயே பேசி அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தியவர். இவர் இஸ்லாம் கூறும் முறையையும் நாட்டுப் பற்றினையும் நன்றே உணர்த்திட அமீர் றிஸ்வி முப்தி அவர்கள் நுவரெலியா புதிய பள்ளிவாச லில் நிகழ்த்திய உணர்வுபூர்வமிக்க பேருரையை இங்கே வாசிக்கக் கடவரீர்:

“இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கிறது. இஸ்லாம் வருவதற்கு முன்பும் அரபிகள் இங்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சிகள் காணப்படுகின்றன. அரபிகளினுடைய தொடர்பு இந்த நாட்டிற்கு புதியதொரு தொடர்பு அல்ல. இது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதையும் அங்கு நாம் உறுதிப்படுத்தினோம். அத்தோடு முஸ்லிம்களாகிய நாம் நாட்டுப் பற்றுள்ளவர்கள் என்பதையும், நாம் எப்போதும் தாய் நாட்டை மதித்து நடப்பவர்கள் என்பதையும் நாம் தெளிவுபடுத்தினோம். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது கஃபாவைப் பார்த்து கைசேதப்பட்டவர்களாகவும், மக்காவைப் பார்த்து எனக்கு இந்த நிலமை ஏற்படாவிட்டால் நான் ஒரு போதும் மக்காவை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறினார்கள்.

இந்த பூமி எமதே

நாட்டுப்பற்று என்பது எமது மார்க்கத்தில் முக்கியமான ஒரு அம்சமாகும். நாம் இந்த பூமிக்கு சொந்தமானவர்கள். எமது முன்னோர் களிலிருந்து ஆயிரம் வருடங்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். இதை சொன்னதற்குப் பிறகு இந்த நாட்டில் நாம் பல வகையான சோதனைகளை சந்தித்திருக்கிறோம். இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பயங்கரமான சோதனைகளின் போது நாம் உயிர்களைக் கூட அர்ப்பணம் செய்திருக்கிறோம். இதற்கு நல்ல சான்றாக காத்தான்குடியிலுள்ள மஸ்ஜித் இன்னும் இருக்கிறது.

கடந்த காலத்தில் சுனாமி ஏற்பட்ட போது இந்த நாட்டில் 17000 முஸ்லிம்கள் சஹீதானார்கள் என்பதும் எமது வரலாற்றில் முக்கியமான ஓர் அம்சமாக காணப்படுகிறது. இவற்றுக்கப்பால் பயங்கரவாதத் தாக்குதல்களால் முஸ்லிம்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் இந்த நாட்டில் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக இன்றும் இருப்பது நமக்கு மிகவும் கவலையைத் தருகிறது.

இந்த நிலைமைகள் அனைத்தையும் நாம் அங்கு சுட்டிக்காட்டி விட்டு மார்க்க அடிப்படையில் மூன்று விடயங்களை முன்வைத்தோம். முதலாவது எமது மார்க்கம் யாரையும் பலவந்தப்படுத்தவில்லை. நாம் மஸ்ஜிதுகளினூடாக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கின்றோம். யாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றால் மிகவும் சந்தோசமாக அவர்களை வரவேற்கின்றோம். ஆனால் மார்க்கத்தை பலவந்தமாக திணிப்பது என்பது எமது மார்க்கத்தில் கிடையாது. ஒரு நபித் தோழர் தனது இரண்டு மகன்களுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்திய போது நபியவர்கள் மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்று இந்த அல்-குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நாம் யாரையும் பலவந்தப்படுத்தமாட்டோம்.

 

முஸ்லிமல்லாதவர்களை திட்டாதீர்கள்

இரண்டாவது, ‘நீங்கள் அல்லாஹ் அல்லாதவைகளை வணங்கக் கூடியவர்களைத் திட்ட வேண்டாம் என்று அல்-குர்ஆன் எச்சரிக்கின்றது. நாம் இதையும் வலியுறுத்திக் கூறினோம். எமது மார்க்கம் யாரையும் திட்டுவதில்லை. அது அனைவரையும் அரவணைத்து வழிகாட்டக் கூடியது. அது மனித நேயத்தை சுமந்தது.

மூன்றாவது, எமது மார்க்கம் ஓர் அழகான வரையறையை எமக்கு வகுத்துத் தந்துள்ளது. அதாவது உங்களது மார்க்கம் உங்களோடு எமது மார்க்கம் எம்மோடு என்பதாகும். உங்களுடைய மார்க்கத்தைப் பற்றி நாம் தப்பாக பிரசாரம் செய்யமாட்டோம். உங்களுடைய மார்க்கத்தை நாம் நிந்திக்க மாட்டோம். அதே நேரத்தில் நீங்கள் எமது சுதந்திரத்தை எமக்குத் தர வேண்டும். அல்-குர்ஆன் இப்படிக் கூறுகின்றது ‘உங்களது மார்க்கம் உங்களோடு எனது மார்க்கம் என்னோடு’ என்று கூறுமாறு நபியவர்களைப் பணிக்கின்றது.

இவற்றுக்கு அப்பால், பிரதானமாக ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம் பெளத்தர்களாக இருக்கட்டும், இந்துக்களாக இருக்கட்டும், கிறிஸ்தவர்களாக இருக்கட்டும் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் ஓர் குடும்பமாக இருக்கி றோம் என்பதையும் வலியுறுத்தினோம். நாம் அனைவரும் மனித நேயத்துடன் ஒன்றுபடுகின்றோம். இஸ்லாம் இப்படிப்பட்ட சிறப்பான போதனைகளை எமக்கு வழங்கியிருக்கிறது.

அத்தோடு எமக்கு இந்த நாட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் நாம் நமக்குள்ளாலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். அவையெதனையும் பிரிதொரு நாட்டின் தலையீட்டினால் தீர்த்து வைக்க முடியாது.

எமது முன்னோர்கள் இப்படித் தான் எமக்கு நடந்து காட்டியிருக்கிறார்கள். அதே நேரம் நாம் எந்த சமூகத்திற்கும் எதிரானவர்களும் அல்ல. இஸ்லாம் அனைத்து விடயங்களிலும் எமக்கு சிறப்பான முன்மாதிரியைக் காட்டித் தந்துள்ளது.”

அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் போதனைகளை இங்கு ஜனாதிபதி நினைவுபடுத்துகிறார்…. வாசிப்போ

 

 

பொய் ஒரு சாபம்

இத் தீய பழக்கமுடையவர்கள் சமுதாயத்தில் குழப்பத்தைத்தவிர வேறெதையும் செய்ய உதவ மாட்டார்கள். மக்கள் அவர்களை உதாவாக்கரை என ஒதுக்கி விடுவார்கள்.பொய் பேசுபவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஒரு செயலையே செய்கிறான். மனிதனுடைய முன்னேத்தைத் தடுத்கும் ஒரு முக்கிய செயலாக பொய் பேசும் பண்பு விளங்குகிறது.

இது நீண்ட காலம் வைத்தியம் செய்யவேண்டிய ஒரு வியாதியாகும். பொய் என்பது ஒரு முஃமினிடம் இருக்க்க் கூடாத பண்பு எனவேதான் இறை தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல்ல்ம்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்:

”ஒரு முஃமினிடம் எல்லாத் தீமைகளும் இருக்கலாம். ஆனால். அவனிடம் பொய்யும் நேர்மையின்மையும் இருக்க்கூடாது” (அஹ்மத்)

பொய் சொல்கின்ற ஒருவன் அந்தப் பொய்யை எவ்வளவு தூரத்திற்குப் பரப்புகின்றானோ அந்த துாரத்தின் அளவிற்கு அவனது பாவத்தின்அளவை வளா்துக்கொள்கின்றான்.ஆகவே பொய் பேசுபவா்கள் மிகக் கடுமையான தண்டனைகளை அனுபவிப்பார்கள் என்பதில் சந்தோகம் கிடையாது.

எனவேஇ நாம் இக்கொடிய பாவத்திலிருந்து விமோசனம் பெற்றவா்களாக வாழ்வதற்கு முயற்சிப்போம்!

பள்ளிவாசல்

அல்லாஹ்வைத் தொழும் இடங்கள் இறை ஆலயங்களாகும். தொழுகை பற்றியும் பள்ளிவாயல் பற்றியும் பல அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் வந்துள்ளன.

(நபியே!) தொழுதிட உம் குடும்பத்தினருக்கு கட்டளையிடுவீராக! அதில் உறுதியாக இருப்பீராக! உணவை உம்மிடம் நாம் கேட்கவில்லை. நாம் தான் உமக்கு உணவளிக்கிறோம். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கு உண்டு. (அல்குர்ஆன் 20:132)

தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக உள்ளச்சமுடையவர்களாக நில்லுங்கள். (அல்குர்ஆன் 2:238)

பகலின் இரு முனைகளிலும் மற்றும் இரவின் பகுதியில் தொழுகையை நீர் பேணுவீராக! நிச்சயமாக நற்செயல்கள், தீய செயல்களை போக்கிவிடும். இது இறைவனை நினைவு கூர்வோருக்கு நல்லுபதேசமாகும். (அல்குர்ஆன் 11:114)

தொழுகை என்பது முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமை என இந்த வசனம் உட்பட பல வசனங்கள் இதை அறிவிக்கின்றன.

ஒரு மனிதனுக்கும் இறை மறுப்புக்கும் இடையே வித்தியாத்தைக் காட்டுவது தொழுகையை விடுவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கின்றார்கள் (முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், திர்மிதீ)

இத்தொழுகையை கூட்டு முறையில் தொழுதால் அதிக பயனுண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது. கூட்டு முறையில் தொழுவது பற்றி ஆர்வமூட்டும் அதேவேளையில் கூட்டு முறையில் தொழுதிட பள்ளிவாசல் நோக்கி வர வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுகின்றது.

அல்லாஹ் எதன் மூலம் உங்கள் குற்றங்களை மன்னித்து, அந்தஸ்துகளை உயர்த்துவானோ அதை உங்களுககு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) கேட்க இறைத்தூதர் அவர்களே! அறிவியுங்கள் என்றனர். உழுவை வீட்டில் செய்து விட்டு பள்ளிவாசல் பக்கம் வருவதற்காக காலடிகளை அதிகப்படுத்துவதும் ஒரு தொழுகை முடிந்து மறு தொழுகைகளை எதிர்பார்ப்பதும்தான் குற்றங்களை அழிக்கும் என்று நபிகள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லிம்)

பள்ளிவாசலைக் கட்டுவதற்கும் இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.

ஒருவர் அல்லாஹ்வுக்காக வணங்குமிடம் ஒன்றை உருவாக்கினால் அவருக்காக சொர்க்கத்தில் அல்லாஹ் அதுபோன்றதை உருவாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உதுமான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

 

பள்ளிவாசலுக்குள் நுழைதல்

பள்ளிவாசலுக்குள் நாம் நுழையும் போது வலது காலை எடுத்து வைத்து பின்வரும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும். “அல்லாஹும்ம ஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக்க” (இறைவா! உனது அருளின் வாசல்களை எனக்குத் திறப்பாயாக!) என்று கூறிக் கொள்ளவும். பள்ளியை விட்டு வெளியேறும் போது “அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்க” (இறைவா! உன் அருளை உன்னிடம் கேட்கிறேன்) என்று கூறிக் கொள்ளவும்.

குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையக்கூடாது. எப்போதும் சுத்தத்துடனும் வுழுவுடனும் பள்ளிக்குள் நுழைவது சிறந்தது. நுழைந்ததும் மஸ்ஜிதுக்கு காணிக்கையாக இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்வது சிறந்தது.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் போது அவர்களிடம் வந்தேன். இரண்டு ரக்அத் தொழுதுகொள் என்று என்னிடம் கூறினார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி, முஸ்லிம்)